கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.சி. ரகு நியமிக்கப்பட்டார்.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக எம்.சி. ரகு நியமிக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் தியாகி எம்.சென்னையன் என்பவரது மகனாக 1969-ல் பிறந்த எம். சி. இரகு மாணவர் பருவத்தில் 1991 முதல் 1996 சென்னை பச்சையப்பா கல்லூரியில் B.Com படிக்கும் போது மாணவர் காங்கிரஸ் தலைவராக பணியாற்றி வந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையினால் ஈர்க்கப்பட்டார்.

பின்னர் கல்லூரி படிப்பை முடிந்த எம்.சி. இரகு 1996 - முதல் 2000 வரை கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலாளராக பணியாற்றி வந்த இவரை 2001-ல் மாநில பொதுக்குழு உறுப்பினராக அன்னை சோனியா காந்தியால் நியமிக்கப்பட்டார், தொடர்ந்து 2006 முதல் 2016 வரை கிருஷ்ணகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பணியாற்றினார். பின்னர் 2017 - ல் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் மாநில பொதுக் குழு உறுப்பினராக இளம் தலைவர் ராகுல் காந்தியால் எம்.சி. இரகு நியமிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து 2024-ல் முதல் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளராகவும், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கிராம கமிட்டி சீரமைப்பின் பொறுப்பாளராகவும் செயல் பட்டு வந்த வந்த எம்.சி. இரகு அவர்களை தற்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவராக புதியதாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
செய்தியாளர்
மாருதி மனோ
