கிருஷ்ணகிரி நகரம், பூந்தோட்டத்தில் அதிமுக சார்பில் பொங்கல் திருவிழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி நகரம், பூந்தோட்டத்தில் அதிமுக சார்பில் பொங்கல் திருவிழா, நடன நாட்டிய நிகழ்ச்சிகளுடன் உற்சாகமாக கொண்டாட்டம். அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார்.
பொங்கல் திருவிழா தமிழகமெங்கும் பல்வேறு இடங்களில் உற்சாகமாக கொண்டாடி வரும் வேளையில் இதன் ஒரு பகுதியாக கிருஷ்ணகிரியில் உள்ள பூந்தோட்டத்தில் அதிமுக சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி, நடன, நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அண்ணா தொழிற்சங்க செயலாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கி உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்....
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் லாட்டரி விற்பனையும், கஞ்சா புழக்கமும் அதிகரித்துவருவதாகவும் இதை மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்த தவறினால் அதிமுக சார்பில் மாபெரும் போராட்டம் நடத்துவதாக தெரிவித்தார். பூந்தோட்டம் பகுதியில் பல வருடங்களாக அதிமுக சார்பில் நடத்தி வரும் இந்த பொங்கல் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், எத்தனை பேர் வந்தாலும் இது அதிமுக கோட்டை என்பதை பல தேர்தல்களில் இந்த பகுதி மக்கள் நிரூபித்து காட்டியுள்ளார்கள் என தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவைத் தலைவர் காத்தவராயன், நகரச் செயலாளர் கேசவன், எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் நகர மன்ற தலைவருமான தங்கமுத்து, ஐடி விங் சந்துரு, ஜே.கே.வெங்கடாசலம், நவாப், மாரியப்பன், சரவணன், கோபி, ராஜசேகர், ஹாஜி மேஸ்திரி, உள்ளிட்ட பலர் அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
