நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். !
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி : 2
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சாமல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நடைபெற்ற "நலம் காக்கும் ஸ்டாலின்" திட்ட மருத்துவ முகாமில் 1279 நபர்கள் பதிவு செய்து, மருத்துவ சிகிச்சை பெற்றனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப தகவல் அளித்துள்ளார்.
உடன், மாவட்ட சுகாதார அலுவலர் மரு.ரமேஷ் குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் முருகேசன், மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் மரு.மாலதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
