அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம்.!
கிருஷ்ணகிரி

அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டம் மாவட்ட செயலாளர் KPM.சதீஷ்குமார்.BE.MBA தலைமையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றியம், பீமாண்டபள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 2026-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில், தீய சக்தி திமுகவை வெற்றி கொள்ள வேண்டிய அவசியத்தைப் பற்றியும், நமது கழக வெற்றிக்கு எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும், கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரிடமும் கலந்துரையாடி தேர்தல் பணியில் ஈடுபட்டார்.
அப்போது அவருடன் வேப்பனப்பள்ளி மேற்கு ஒன்றிய செயலாளர் சைலேஷ் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட, ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் கழக தோழர்கள் இடம் பெற்றனர்.
செய்தியாளர்
மாருதி மனோ