தமிழக வெற்றி கழகத்தின் 3 - ம் ஆண்டு துவக்க விழா.!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளியில் தமிழக வெற்றி கழகத்தின் 3 - ம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு பெருந்தலைவர் காமராஜர் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து இருசக்கரப் வாகன பேரணியில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகத்தின் 3-ம் ஆண்டு துவக்க விழாவினை முன்னிட்டு த.வெ.க. கட்சியினர் விசில் அடித்து உற்சாகமா கொண்டாடி வருகிறனர். இதன் ஒரு பகுதியாக வேப்பனப்பள்ளியில் ஒன்றிய செயலாளர்களான நாகராஜ் ஜெகதீஷ், அம்ரிஷ் ஆகியோர் ஏற்பாட்டில் த.வெ.க. கட்சியின் சார்பில் திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய இருசக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
இதில் ஆவல்நத்தம் காசி விஸ்வநாதர் திருக்கோவில், வேப்பனஹள்ளி ஶ்ரீ கோதண்டராமர் திருக்கோவில் ஆகிய கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்ய நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல முயன்றனர். அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் உரிய அனுமதி இன்றி பேரணியில் ஈடுபடுவதாக கூறி, தடுத்து நிறுத்தியதால் பரப்பரப்பு ஏற்பட்டது.
பின்னர் அமைதியான முறையில், கூட்டம் சேர்க்காமல் இருசக்கர வாகனத்தில் பேரணியாக செல்ல காவல் துறையினர் அனுமதி அளித்ததையடுத்து த.வெ.க மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் நாச்சிகுப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பெருந்தலைவர் காமராசர் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி இரு சக்கர வாகன பேரணியில் ஈடுபட்டனர்.
வேப்பனஹள்ளி இருந்து துவங்கிய இந்த இருசக்கர வாகன பேரணியானது நாச்சிகுப்பம், நெடுசாலை, தீர்த்தம், கொத்தகிருஷ்ணப்பள்ளி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி என பல்வேறு கிராமங்கள் வழியாக சென்று பொது மக்களிடம் விசில் ஊதி த.வெ.க. கட்சிக்கு ஆதரவு திரட்டினார்கள்.
அப்போது மாவட்ட பொருளாளர் முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் மகேந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் வேப்பனஹள்ளி ஒன்றிய நிர்வாகிகளான சலிம்பாஷா, திருமலை வாசன், முருகேசன், சத்திவேல், ராஜா சேகர், சந்திரசேகர், மணி, நாகராஜ், எல்லப்பன், பாபு, ரகு வேலன், பாப்பாண்ணா ஶ்ரீ ராகவன், மற்றும் மாவட்ட மகளீர் அணியை சேர்ந்த திருமதி இந்திரா நாகராஜ், தனலட்சுமி, நேத்ராவதி, ஈஸ்வரி, துர்கா உட்பட்ட த.வே.க. நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் என ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
