மருத்துவர் சி தென்னரசுவை பாராட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார், இ.ஆ.ப.சால்வை அணிவித்தார்.!
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், போச்சம்பள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக பள்ளிக்கு வண்ணம் பூசும் பணியினை தன்னுடைய சொந்த செலவில் செய்து கொடுத்த கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட மருத்துவர் அணி துணைத் தலைவர் மருத்துவர் சி தென்னரசுவை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் குமார், இ.ஆ.ப. பாராட்டி சால்வை அணிவித்தார்.
இந்த நிகழ்வை தலைமை ஆசிரியர், ஆசிரியபெருமக்கள். மாணவர்கள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக சேவகர்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தியாளர்
மாருதி மனோ