புதிய பாரதம் எழுத்தறிவுத்திட்ட தேர்வு
நாட்டில் உள்ள அனைவரும் எழுத்தறிவு பெற வேண்டும் எனும் குறிக்கோளை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு அரசின் பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் சார்பில் நடத்தப்படும் "புதிய பாரத எழுத்தறிவுத் திட்ட அடிப்படை எழுத்தறிவுத் தேர்வு இன்று தமிழ்நாடு முழுதும் அனைத்து துவக்க நடுநிலை பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.
அதன்படி இன்று கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வில் 20 பேர் கலந்துக்கொண்டு தேர்வு எழுதினர்.
முன்னதாக பள்ளித் தலைமை ஆசிரியர் திரு செ. இராஜேந்திரன் அவர்கள் இத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும், கல்லாமையின் அவலம் குறித்தும் எடுத்துக்கூறி, அனைவரும் எழுதப் படிக்க தெரிந்துக்கொள்ள வேண்டுமென விளக்கி தேர்வை துவக்கி வைத்தார்.
இதில் 35 முதல் 65 வயது வரை உள்ளவர்கள் கலந்துக் கொண்டனர்.
தேர்வுக்கான ஏற்பாடுகளை உதவி ஆசிரியர்கள் கோ. ஆனந்தன், பூ. இராம்குமார், மா. யோகலட்சுமி, மு. அகிலா, தன்னார்வலர் வெ. பசுமதி ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
மாருதி மனோ