பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பம் அகற்றுவது மற்றும் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி

பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பம் அகற்றுவது மற்றும் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் .!

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில்  சாலையோர கட்சி கொடி கம்பம் அகற்றுவது மற்றும் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பது தொடர்பான  ஆலோசனைக் கூட்டத்தில் பொது இடங்களில் கட்சி கொடிகம்பங்கள் அமைக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக வருவாய் கோட்டாச்சியர் குறிப்பிட்டார்.

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பெயரில் பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பம் அகற்றுவது மற்றும் கட்சி தலைவர்களின் சிலைகளை மறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜஹான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர்களான முரளி, முத்துகிருஷ்ணன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

மேலும் இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பெயரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலை  அசம்பாவிதங்கள் இன்றி நடத்திட வேண்டி அரசியல் கட்சியினர்களின் பங்கு முக்கியமாக இருப்பதனால் பொது இடங்களில் வைத்துள்ள அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்களை அகற்றிட வேண்டும், புதியதாக எந்த கொடி கம்பங்களும் வைக்கக்கூடாது,

மேலும் அவரவர் சொந்த நிலத்தில் கூட கொடி கம்பங்கள் அமைக்க அதற்கான அனுமதி பெற வேண்டும், இதேபோல அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை துணிகள் கொண்டு மறைப்பதற்கு அரசியல் கட்சியினர்  உரிய ஒத்துழைப்பு அளிக்கப்பட வேண்டும். குறிப்பாக உரிய அனுமதி இன்றி புதியதாக சிலை அமைப்பதோ அல்லது கொடி கம்பங்கள் அமைக்க கூடாது. மீறி இது போன்ற செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் லலித் ஆண்டனி, தேசிய மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் சந்திரமோகன், அதிமுக நகர செயலாளர் கேசவன், விடுதலை சிறுத்தை கட்சியின் நகர செயலாளர் ஆலப்பட்டி ரமேஷ்,
திமுக கட்சியை சேர்ந்த கோவிந்தசாமி உள்ளிட்ட அனைத்து அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வட்டாச்சியர் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்களான உமாசங்கர், சரவணன், கண்ணாத்தாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்..

செய்தியாளர் 

மாருதி மனோ