கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டிட்டுள்ள டாக்டர் செல்லக்குமார் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டிட்டுள்ள டாக்டர் செல்லக்குமார் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.!

கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளராக போட்டிட்டுள்ள டாக்டர் செல்லக்குமார் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்தார்.

கிருஷ்ணகிரி சட்ட மன்றத் தொகுதியில் இந்திய கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் கிருஷ்ணகிரி காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் அறிவிக்கப்பட்டார்,

இதனை அடுத்து வேட்பு மனு தாக்கல்  கடைசி நாளான இன்று  இந்திய கூட்டணி கட்சியின் திமுக மாவட்ட செயலாளரும் சட்ட மன்ற உறுப்பினருமான மதியழகன், தேமுதிக கட்சியின் மாவட்ட செயலாளர்  சின்ராஜ், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மணி ஆகியோரின் தலைமையில்  கூட்டணி கட்சியினர் பேரணியாக வந்தனர்.

பின்னர் கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில்  வருவாய் கோட்டாட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான ஷாஜாஹானிடம் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார் தனது வேட்பு மனுவினைத் தாக்கல் செய்து உறுதிமொழியினையும் வாசித்தார்.

அப்போது காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாவட்டத் தலைவர் எம்.சி.ரகு, மாவட்ட துணைத் தலைவர் பி.சி.சேகர், முன்னாள் மாவட்ட தலைவர் நாஞ்சில் ஜேசு, பர்கூர் சட்ட மன்ற தொகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ஆடிட்டர் வடிவேல், நகர தலைவர் லலித் ஆண்டனி, முன்னாள் நகர தலைவர் முபாரக், மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி, இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் விக்னேஷ் பாபு, சேவாதள மாவட்ட தலைவர் தேவராஜ், கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, மாவட்ட செயலாளர் ஹரி மற்றும் இந்திய கூட்டணி கட்சியை சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ