ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா.!

கிருஷ்ணகிரி

ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா.!

ஓசூர் மோரனப்பள்ளியில் உள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் தேர் திருவிழா :

ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் இழுத்து வழிபாடு.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே இரண்டாவது சிப்காட் மோரனப்பள்ளி பகுதியில் அமைந்துள்ள பழமையான ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமி கோயில் பிரமோற்சவ விழா நடைபெற்றது அதனை ஒட்டி கடந்த மாதம் 31 ஆம் தேதி முதல் விஸ்வக்சேன ஆராதனைமகா திருமஞ்சனம், ரக்ஷா பந்தனம் ஆச்சரிய ருத்விக்வரணம் நடைபெற்று கொடியேற்றுதல் நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து கடந்த ஒன்றாம் தேதி முதல் தொடர்ச்சியாக கோயிலில் நரசிம்ம சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன.

அதனைத் தொடர்ந்து நேற்று கோயிலில் பிரம்ம ராதோற்சவம் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஸ்ரீ அபய நரசிம்ம சுவாமிகள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அமர வைக்கப்பட்டு தேர் இழுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  இதில் ஓசூர் மட்டுமல்லாமல் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தேரின் வடம் பிடித்து இழுத்து நரசிம்ம சுவாமிகளை வழிபட்டு சென்றனர். இதனை ஒட்டி கோயிலில் நீர் மோர் பானங்கள் மற்றும் அன்னதானங்கள் வழங்கப்பட்டது.
 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி தலைவர் ஆர் ஜெயபால், செயலாளர் கோபால், கோவில் தலைமை அர்ச்சகர், கோவில் கமிட்டி பொருளாளர் ஆனராமமூர்த்தி, ஆவல்பள்ளி சேர்ந்த ஃபார்ம் ஹவுஸ் மஞ்சுநாத் நாகராஜ் ஆகியோர்  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் 

மாருதி மனோ