வேட்டியம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்த காங்கிரஸ் கட்சி வேட்பாளர். !
கிருஷ்ணகிரி
வேட்டியம்பட்டியில் தேமுதிக நிர்வாகிகளை கிருஷ்ணகிரி சட்டமன்றத் தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி கட்சியின் சார்பில் போட்டியிட்டுள்ள காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்வகுமார் கை சின்னத்திற்கு ஆதரவு திரட்டினார்.
கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், மதசார்பற்ற
கூட்டணி கட்சியின் காங்கிரஸ் வேட்பாளராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளருமான டாக்டர் செல்லக்குமார் கை சின்னத்தில் போட்டியிட்டுள்ளார். இதனை அடுத்து மதசார்பற்ற கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அடுத்துள்ள வேட்டியம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட டாக்டர் செல்லக்குமார் கலந்துகொண்டு கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தேமுதிக செயலாளர் முருகனை சந்தித்து பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


தொடர்ந்து கிழக்கு ஒன்றிய அவைத் தலைவர் பார்க் கோவிந்தன், பார்க் சிவா, மாவட்ட தொழில் சங்க தலைவர் திம்மராயன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர், முருகேசன், மாவட்ட கேப்டன் மன்ற துணை செயலாளர் சந்திரன் ஒன்றிய துணை செயலாளர் சண்முகம், தே.மு.தி.க. மாவட்ட பிரதிநிதி கே.டி.முருகன், முன்னாள் தே.மு.தி.க ஒன்றிய குழு உறுப்பினர் வேடியப்பன், பெரியமுத்தூர் ஊராட்சி செயலாளர் பச்சையப்பன், பெத்தனப்பள்ளி ஊராட்சி செயலாளர் வெங்கட்டராமன், மாவட்ட தொழில் சங்க துணை செயலாளர் ஆட்டோ வேலு, ஒன்றிய விவசாய அணி செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய தொண்டர் அணி செயலாளர் அவதானப்பட்டி முத்து, மின்னல் மாது, மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சுரேஷ், ஒன்றிய வர்த்தக அணி துணை செயலாளர் சண்முகம், கிளைக் கழக செயலாளர் எம் இளவரசன் உள்ளிட்ட ஏராளமானவர்களை சந்தித்த காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் செல்லக்குமார், பொன்னாடை அணிவித்து, மத்தியிலும் மாநிலத்திலும் மக்கள் விரும்பும் அரசாக அமைந்திட அனைவரும் கை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
செய்தியாளர்
மாருதி மனோ
