புதிய பேருந்து நிலையம் அருகில்   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் சிக்கன வார விழா என்ற  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி

புதிய பேருந்து நிலையம் அருகில்   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் சிக்கன வார விழா என்ற  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில், புதிய பேருந்து நிலையம் அருகில்   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பாக மின் சிக்கன வார விழா என்ற  விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இப்பேரணியில் கிருஷ்ணகிரி கிழக்கு  மாவட்ட  செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான  தே.மதியழகன், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சிதலைவர் ச.தினேஷ்குமார், இ.ஆ.ப ஆகியோர்கள் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தனர் .

இவ்விழிப்புணர்வு பேரணியில் 400 மின்வாரிய பணியாளர்கள் மற்றும் 100 கல்லூரி மாணவியர்கள் கலந்துகொண்டனர். இப்பேரணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையத்தில் தொடங்கி இராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மேற்பார்வை பொறியாளர் கிருஷ்ணகிரி மின்பகிர்மான வட்டம் / கிருஷ்ணகிரி அலுவலகம் வரை நடைபெற்றது. 

மேலும், பொதுமக்களுக்கு மின் சிக்கனம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பதாகைகள் ஏந்தியும், மின் சிக்கனம் மற்றும் மின் பாதுகாப்பு குறித்த ஒலிப்பெருக்கி மூலமும், பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

செய்தியாளர் 

மாருதி மனோ