ஒசூர் தொகுதியில் உள்ள கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.!
கிருஷ்ணகிரி
ஒசூர் தொகுதியில் உள்ள கிராம பகுதிகளில் அதிமுக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் சட்டமன்ற தொகுதி, அதிமுக வேட்பாளர், முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி அவர்கள் நேற்று வேட்புமனு செய்த பிறகு தனது பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார்.
இரண்டாவது நாளான இன்று ஒசூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பேரிமை, காட்டிநாயனதொட்டி, குருபரப்பள்ளி உள்ளிட்ட ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள் தோறும் பொதுமக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார்..

திமுக செய்யத் தவறியவைகளை பட்டியலிட்டு, அதிமுக தேர்தல் வாக்குறுதிகளை எடுத்துக்கூறி பிரச்சாரம் மேற்கொண்ட அவருடன் சூளகிரி வடக்கு ஒன்றிய செயலாளர் பாபு வெங்கடாசலம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முனி கிருஷ்ணப்பா அப்பா,பாஜக நரசிம்மன், பாமக கோவிந்தராஜ் உள்ளிட்ட அதிமுக மற்றும் கூட்டணி கட்சியினர் பலரும் பங்கேற்றிருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
