இன்று காலை முதல் விருப்ப மனு ... மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணிகள்.!
சென்னை
இன்று காலை முதல் விருப்ப மனு ... மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்... வேகமெடுக்கும் திமுக தேர்தல் பணிகள்."
சட்டமன்ற தேர்தல் பணிகளை திமுக முடுக்கிவிட்டுள்ள நிலையில், அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று மாலை 6:30 மணிக்கு முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க.ஸ்டாலின் தலைமையிலான இக்கூட்டம், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
வெல்லும் தமிழ்ப் பெண்கள் என்ற தலைப்பில் மாநிலம் முழுவதும் வீடு வீடாகச் சென்று பரப்புரை மேற்கொள்வது தொடர்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளதாகவும் துரை முருகன் குறிப்பிட்டுள்ளார்.
இதில், மாவட்டச் செயலாளர்கள், திமுக எம்பி, எம்எல்ஏக்கள், தொகுதி பார்வையாளர்கள், பயிற்சியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட மகளிர் அணியினர் பங்கேற்க அறிவுறுத்தி உள்ளார்.
தஞ்சாவூர் மகளிர் மாநாட்டின் தொடர்ச்சியாக, திமுக அரசின் சாதனைகளை ஒவ்வொரு குடும்பத் தலைவியிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் "வெல்லும் தமிழ்ப் பெண்கள்" திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகள், தேர்தல் வியூகங்கள் குறித்து, இன்று நடக்கும் கூட்டத்தில் முதலமைச்சர் விரிவாக ஆலோசனை நடத்துவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
திமுகவில் விருப்ப மனு
இதற்கிடையே இன்று முதல் சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட இன்று(பிப்.20) முதல் மார்ச் 2 ஆம் தேதி வரை விருப்பமனு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி விண்ணப்ப படிவத்தை ரூ.1,000 செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்; பொதுத் தொகுதிக்கு ரூ.25,000; மகளிர், தனிதொகுதிக்கு ரூ.15,00 விண்ணப்ப கட்டணம் எனவும் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
சுகுமாரன்
