வேளச்சேரியில் பழ வியாபாரியிடம் பாரத் பே கியூ ஆர் கோடு மூலம் பெற்ற பணத்தை மோசடியாக அபகரித்த பாரத் பே நிறுவன ஊழியர் மீது அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார். 

வேளச்சேரியில் பழ வியாபாரியிடம் பாரத் பே கியூ ஆர் கோடு மூலம் பெற்ற பணத்தை மோசடியாக அபகரித்த பாரத் பே நிறுவன ஊழியர் மீது அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார். 

வேளச்சேரியில் பழ வியாபாரியிடம் பாரத் பே கியூ ஆர் கோடு மூலம் பெற்ற பணத்தை மோசடியாக அபகரித்த பாரத் பே நிறுவன ஊழியர் மீது அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார். 

சென்னை பெருங்குடியை சேர்ந்தவர் வேலு(48), இவர் வேளச்சேரி பேபி நகரில் சாலையோரம் தள்ளுவண்டியில் வைத்து பழவியாபாரம் செய்து வருகிறார்.

கடந்த பிப்ரவரி மாதம் பாரத் பே நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் வந்து பழக்கடை உரிமையாளரை அணுகி டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளரிடம் பணம் பெறும் முறை குறித்து விவரித்து, பழக்கடையில் கியூ ஆர் கோடு ஸ்கேனர், பணம் பெறும் போது அது குறித்த அறிவிப்பு கொடுக்கும் ஸ்பீக்கர், உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்படும், தினந்தோறும் வரவு வைக்கப்படும் பணம் அடுத்த நாள் உங்களுடைய வங்கிக் கணக்கில் சேர்க்கப்படும் என கூறியதன் பேரில் பாரத் பே நிறுவனத்தில் கியூ ஆர் கோடு முறையை கடையில் வைத்து, அதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொடுத்தனர். அன்று முதல் வியாபாரம் செய்து வந்துள்ளார். 

ஜூலை மாதம் முதல் அவரது பாரத் பே கணக்கில் இருந்து அவருக்கு அனுப்ப வேண்டிய தொகையை முழுமையாக அனுப்பாமல் பணம் குறைவாக அனுப்பியுள்ளனர். 

அதனை கவனிக்காமல் இருந்ததால் கடந்த 4 மாதங்களாக நவம்பர் 22ம் தேதி வரை எனது பாரத் பே கணக்கில் இருந்து ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் மோசடியாக பாரத் பே ஊழியர்கள் மூலம் திருடப்பட்டுள்ளது. 

இதற்கிடையே அவரது பணபரிவர்த்தனை நன்றாக இருப்பதால் 50 ஆயிரம் லோன் கொடுத்து அதற்காக தினந்தோறும் 308 ரூபாய் பணம் பிடித்தம் செய்யப்படுகிறது, இதோடு சேர்ந்து தினந்தோறும் 1000, 2000, 3000 என பல்வேறு செல்போன் எண்களுக்கு ரீசார்ஜ் செய்து பண மோசடி செய்யப்பட்டுள்ளது. 

இந்த தகவல் அறிந்து கிண்டி பட்ரோட்டில் உள்ள பாரத் பே அலுவலகத்தில் சென்று கேட்டதற்கு முறையாக பதிலளிக்காமல் அலைக்கழித்ததாகவும், இதனால் பாரத் பே நிறுவன ஊழியர் மோசடியாக அபகரித்த பணத்தை மீட்டுக் கொடுக்கவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அடையார் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளார். 

சைபர் கிரைம் போலீசார் புகாரை பெற்று விசாரித்து வருகின்றனர். 

பழம் விற்று பணம் சம்பாதித்து வந்த வியாரியை டிஜிட்டல் பணபரிவர்த்தனை மூலம் பணம் பெறலாம் என கூறி மோசடி செய்த பாரத் பே நிறுவன ஊழியர் மீது உரிய நடவடிக்கை எடுக்ககோரி பாதிக்கப்பட்ட நபர் கோரிக்கை வைக்கின்றார். 

பேட்டி:- வேலு ( பழ வியாபாரி, பணத்தை இழந்தவர்)