சீமான் வீட்டில் நேற்று நடந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆய்வாளருக்கு பிடி வாரண்ட் பிறப்பித்தது நீதிமன்றம்.!
சென்னை

நீலாங்கரை காவல் ஆய்வாளராக உள்ளார் பிரவீன் ராஜேஷ். இவர் முன்னாள் ஆய்வாளர் ராஜகுருவின் மகன். ராஜகுரு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குண்டுவெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தவர்.
அப்பா மரணத்தை பார்த்தும்.. நாட்டிற்கு சேவை செய்ய வேண்டும் என்று போலீஸ் பணிக்கு இவர் வந்தாக கூறப்படுகிறது. சட்ட ஒழுங்கில் முக்கியமான போலீஸ் அதிகாரியாக, மிகவும் நேர்மையான, துணிச்சலான அதிகாரியாக பார்க்கப்படுவதாகவும் முக்கியமாக நீலாங்கரை பாதுகாப்பு வழங்குவதிலோ சிக்கலான இடம் என்றாலும் அதை துணிச்சலாக திறம்பட செய்து வருகிறார் என்றும் கூறப்படுகிறது.
இவருக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரி ஒருவர்தான் சீமான் வீட்டில் கிழிக்கப்பட்ட சம்மன் குறித்து விசாரிக்க சென்றார்.
அப்போது சீமான் காவலாளி அவரை துப்பாக்கி காட்டி மிரட்டி உள்ளார். இதை பற்றி கேட்டதும் உடனே ஜீப்பை எடுத்துக்கொண்டு சீமான் வீட்டிற்கே சென்று கதவை தள்ளிக்கொண்டு உள்ளே சென்றுள்ளார் காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷ். தனக்கு கீழ் வேலை பார்க்கும் அதிகாரிக்கு நேர்ந்த சம்பவம் குறித்து கேட்டதும்.. உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துவிட்டு உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று கைது நடவடிக்கையை மேற்கொண்டு உள்ளார் என்று ஊடகங்கள் பாராட்டி வரும் அதே இன்ஸ்பெக்டர் இப்போது சிக்கலில் உள்ளார்.
இப்போது சீமான் வீட்டுக் காவலாளியை கைது செய்த நீலாங்கரை காவல் ஆய்வாளர் பிரவீன் ராஜேஷூக்கு தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 2019ல் சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபனை தாக்கிய வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2019-ம் ஆண்டு சோமங்கலத்தை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்திபன் என்பவரை தாக்கியதாக தாம்பரம் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்தது. இதில் வரும் 3 தேதி பிரவீன் ராஜேஷ் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என வாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்று சீமான் வீட்டில் சம்மன் கிழிக்கப்பட்டதைக் கண்டித்து ஆக்ரோஷமாக செயகல்பட்ட இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷை ஊடகங்கள் கொண்டாடின. மறு நாளே வழக்கறிஞரை தாக்கியதாக தாம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் வழக்கறிஞரை தாக்கிய வழக்கில் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது பிகப்பெரிய ட்விஸ்டாக பார்க்கப்படுகிறது.
முன்னதாக 2021ல் வடபழனி காவல் நிலைய இன்ஸ்பெக்டராக இருந்த இதே இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ், கொரோனா ஊரடங்கு காலத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக பெண் வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்தார்.
இதற்கு பிரவீன் ராஜேஷை பழி வாங்க அந்த பெண் வழக்கறிஞர் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் ப்ரவீன் ராஜேஷ் மீது வழக்குத் தொடர்ந்தார். வழக்கு பதிவு விருகம்பாக்கம் போலீஸார் மறுத்ததால் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார் அந்த பெண் வழக்கறிஞர். சைதாப்பேட்டை நீதிமன்றமும் பிரவீன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்ய விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ப்ரவீன் ராஜேஷ் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ''கொரோனா ஊரடங்கு காலத்தில் பெண் வழக்கறிஞர் ஒருவர், தன் கணவருடன் முகக்கவசம் அணியாமல் டூவீலரில் சென்றார். அவர்களைக் முகக்கவசம் அணியுமாறு போலீஸார் வழி மறித்து கூறினர். இதனால், அவர்கள் வாக்குவாதம் செய்ததால், வழக்கறிஞரின் கணவர் மீது வழக்குப்பதிவு செய்து, ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தேன். இதனால். என்னைப் பழிவாங்குவதற்காக போலீஸார் தாக்கியதாக விருகம்பாக்கம் போலீஸில் அவர் புகார் செய்தார். இந்த புகாரை விசாரித்த உதவி கமிஷனர், புகார் உள்நோக்கமானது என்று கூறி அதை முடித்து வைத்தார். இதையடுத்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதன் அடிப்படையில், என் மீது விருகம்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதவி செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்றம் பிரவீன் ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உத்தரவிட்டதால் அந்த வழக்கில் இருந்து தப்பினார். இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் அடாதடி அடிக்கடி அடாவடி ஆக்சஷனில் சிக்கி பிரச்னைகளை எதிர்க்கொண்டு வருபவர் என காவல்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.