தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிய கருத்து உண்மை என தமிழிசை பேட்டி.!

சென்னை

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிய கருத்து உண்மை என தமிழிசை பேட்டி.!

தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என விஜய் கூறிய கருத்திற்கு உண்மை தான் என தமிழிசை பேட்டி. 

இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும் என கருத்திற்கு உடன்படுகிறேன் - தமிழிசை. 

இந்தி மொழிக்கு ஆதரவாக மாணவர்களிடம் வலுகட்டாயமாக கையெழுத்து வாங்கவில்லை அமைச்சருக்கு தமிழிசை பதிலடி. 

சென்னை மேடவாக்கத்தில் தமிழ்கூடல் நடத்தும் பாரத தாமரை உலக மகளிர் தினவிழா மகளிர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:- 

மரியாதைக்குரிய முதலமைச்சர் அவர்கள் இன்றைக்கு எம்பிக்கள் கூட்டத்தை கூட்டி தமிழ்நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது அவரவர்கள் தொகுதியில் தென்சென்னயில் பல பிரச்சனைகள் இருக்கு பெண்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இதையெல்லாம் விட்டுட்டு இன்றைக்கு மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் இந்த மறு சீரமைப்பில் நிச்சயமாக தொகுதி மறு சீரமைப்பில் தமிழகம் பாதிக்கப்படாது என்று மிகத் தெளிவாக சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அதையே வச்சிக்கிட்டு பாராளுமன்றம் சென்றால் இதைப் பற்றி பேச வேண்டும் என்று குழப்பம் ஏற்படுத்துவதற்காகவே பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டி இருக்கிறார் அது மட்டும் இல்லை அங்க போய் அவர்கள் எல்லோரும் ஒண்ணும் செய்யப் போவதில்லை வெளிநடப்பு செய்வாங்க இல்லையென்றால் கூச்சல் போடுவார்கள் ஆக்கப்பூர்வமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தால் மக்கள் பிரச்சனைக்காக தேர்ந்தெடுத்தால் இல்லாத பிரச்சனை முன்னிறுத்தி ஓட்டுக்காக இவர்கள் மக்களை ஏமாற்றுகிறார்கள் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாதது குறித்து கேட்ட போது 

உண்மைதான் அதனால்தான் தம்பி விஜய் நேரடியாக நேற்று சொல்லி இருக்கிறார் மகளிர் தின வாழ்த்து என்னவென்றால் மகளிர் பாதுகாப்புக்கு எதிரான இந்த ஆட்சி நீக்கப்பட வேண்டும் என்று சொல்லி இருக்கிறார் அதில் நான் உடன்படுகிறேன்.

அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களிடம் கட்டாய கையெழுத்து வாங்குவதாக கூறியது குறித்து கேட்டதற்கு,

நான் கேட்கிறேன் இவர்கள் நீட்டுக்கு எப்படி கையெழுத்து வாங்கினார்கள் கட்டாய கையெழுத்து எங்கும் வாங்கவில்லை அவர்கள் விருப்பப்பட்டு ஏன் கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயப்படுகிறார்கள் முதலமைச்சர் முதலமைச்சர் சொல்கிறார் சிரிப்பாக இருக்கிறதாம் இந்த கையெழுத்து இயக்கம் அப்புறம் ஏன் கெடுபிடி ஏன் காவல்துறையை வைத்து அவ்வளவு கெடுபிடி என்னை கையெழுத்து வாங்க விடாமல் மூன்று மணி நேரம் நிற்க வைத்ததை நீங்கள் பார்த்து கொண்டு தான் இருந்தீர்கள் லியோ சுந்தரம் போன்றவர்கள் கைது செய்ததை பார்த்துக் கொண்டுதான் இருந்தீர்கள் உங்களுக்கு கையெழுத்து இயக்கத்தை பார்த்து பயம் இல்லை என்றால் ஏன் கைது செய்கிறீர்கள் அதனால் நீங்கள் தான் நீட்டிற்காக உள்ளே போய் குழந்தைகளுடன் வலுக்கட்டாயமாக கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தீர்கள் நாங்கள் அப்படி செய்யவே இல்லை.

பிஸ்கட் கொடுத்து ஏமாற்றவெல்லாம் இல்லை குழந்தைகள் எல்லாம் வருகிறார்கள் அவர்களுக்கு ஆசையாக ஏதாவது கொடுத்திருப்பார்கள் நீங்க கொடுத்தா உடனே ஏமாற்றுவது கிடையாது அவங்க கொடுத்தா ஏமாற்றுவதா என்னப்பா இது ஒன்றும் கட்டாயப்படுத்தவில்லை வந்து பார்க்க சொல்லுங்க கையெழுத்து இயக்கம் நடக்கும் இடத்தில் வந்து பார்க்க சொல்லுங்க 

தமிழிசை என பெயர் வைத்ததற்கு குமரி ஆனந்தன் வருத்தப்படுவார் என சேகர் பாபு கூறியது குறித்து கேட்டதற்கு,

சேகர்பாபு என்னை காலாவதியாகி விட்டதாக சொன்னதற்கு அவர் அதிமுகவில் காலாவதியாகி திமுகவில் வந்திருக்கிறார் நான் கேட்கிறேன் எங்கே இந்திக்காக பேசுகிறோம் மறுபடியும் மறுபடியும் காது என்ன அடைத்திருக்கிறதா என்று தெரியவில்லை இந்தியை பற்றி நாங்க பேசல இன்னொரு மொழியை தான் நாங்கள் பேசுகிறோம் என சொல்கிறோம் தமிழிசை என பெயர் வைத்ததற்கு ஏற்கனவே எங்க அப்பா பெருமைப்பட்டுக் கொண்டிருக்கிறார் இன்னும் பெருமைப்படுவாங்க சேகர்பாபு அண்ணன் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம் என்றார்.

செய்தியாளர்

S S K