மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற தாமதமாகி வருவதால் முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
மூவரசம்பட்டு ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடைபெற தாமதமாகி வருவதால் முதியவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.
செங்கல்பட்டு மாவட்டம், மூவரசம்பட்டு முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில், 12.30 மணியாகியும், 1.30 மணி நேரமாக பொதுமக்கள், பெண்கள், முதியவர்கள் என காத்திருந்தனர்.
இதனால் முதியவர் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
கிராம சபை கூட்டம் குறிப்பிட்ட நேரத்தில் நடத்தாததே முதியவர் மயங்கியதற்கு காரணம் வந்திருவர்கள் பேசிக் கொண்டனர்.
S S K