மூவரசம்பட்டு கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த நபரிடம் கழிவறையை சுத்தம் செய்கிறாயா என அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மூவரசம்பட்டு கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்த நபரிடம் கழிவறையை சுத்தம் செய்கிறாயா என அமைச்சர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், ஆலந்தூர் தொகுதிக்குட்பட்ட, மூவரசம்பட்டு முதல்நிலை ஊராட்சியில் உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் மூவரசம்பட்டு பகுதியில் நிலவும் பல்வேறு பிரச்சனைகளை கோரிக்கையாக வைத்தனர். குறிப்பாக மாடுகள் சாலையில் சுற்றித் திரிவது, கால்வாய்கள் சீரமைப்பது, உள்ளிட்டவற்றை குறிப்பிட்டனர்.
கூட்டத்தில் கலந்து கொண்ட ஒருவர் மூவரசம்பட்டு குளம் அருகே நடைபாதையில் ஏராளமான மக்கள் நடைபயிற்சி மேற்கொள்வதாகவும் அவர்களுக்கு கழிவறை கட்டிக் கொடுக்க கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் கழிவறையை நான் கட்டித் தருகிறேன் நீ சுத்தம் செய்கிறாயா, பராமரிக்கிறாய, 3 மாதத்தில் நாறிப்போய் விடும் என சர்ச்சையாக பதிலளித்தது அனைவரிடத்திடலும் முக சுளிப்பை ஏற்படுத்தியது.
மற்றொருவர் சாலை ஆக்கிரமிப்பு குறித்து முதல்வர் தனிப்பிரிவில் புகார் அளித்தால் அந்த விவரங்களை சம்மந்தப்பட்ட ஆக்கிரமிப்பாளர்களிடமே அதிகாரிகள் கொடுப்பதாக குற்றம் சாட்டினார்.
மேலும் மெட்ரோ ரயில் நிறுத்தத்திற்கு மூவரசம் பட்டு என பெயர் வைக்கவும், குப்பைகளை முறையாக அகற்றவும், மூவரசம்பட்டு ஏரி புனரமைக்கவும் கோரிக்கை வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுப்படும் என தெரிவித்தார்.
S S K