பாஜக பிரமுகர் காதலியோடு சேர்ந்து தொழில் செய்வதாக கூறி தொழிலதிபரிடம் 23 லட்சம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் கைது.!
சென்னை

வேளச்சேரியில் பாஜக பிரமுகர் காதலியோடு சேர்ந்து தொழில் செய்வதாக கூறி தொழிலதிபரிடம் 23 லட்சம் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டதால் கைது.
காதலி தலைமறைவு.
சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் பிரவின் சுந்தர்(27), இவர் பாஜகவில் முன்னாள் மண்டல் இளைஞரணி தலைவராக இருந்துள்ளார் தற்போது பாஜகவில் உறுப்பினராக உள்ளார்.
இவரும் இவரது காதலி ஆர்த்தி என்பவரும் சேர்ந்து நங்கநல்லூரை சேர்ந்த சங்கரராமன்(48), என்பவரிடம் ஆசை வார்த்தைகளை கூறி சிசிடிவி பொருத்தும் தொழில் செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறி 23 லட்சம் வரை பணமாகவும், பொருளாகவும் பிரவீன் சுந்தரும் அவரது காதலியுமான ஆர்த்தியும் பெற்றுள்ளனர்.
பணம் வாங்கி விட்டு திருப்பி தராமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது
இதனையடுத்து தொழிலதிபர் சங்கரராமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார், புகாரின் பேரில் வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகரை கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த பாஜக பிரமுகரின் காதலியை தேடி வருகின்றனர்.
செய்தியாளர்
S S K