சூப்பர் சிங்கர் சீசனில் டைட்டில் வின்னர் அருணாவிற்கு கொடுக்கப்பட்ட வீடு இன்னும் கிடைக்கவில்லையாம்.!

சூப்பர் சிங்கர்

சூப்பர் சிங்கர் சீசனில் டைட்டில் வின்னர் அருணாவிற்கு கொடுக்கப்பட்ட வீடு இன்னும் கிடைக்கவில்லையாம்.!
டைட்டில் வின்னர் அருணா

ன்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியில் டைட்டில் வெற்றி பெற்ற அருணாவிற்கு 60 லட்சம் மதிப்புள்ள வீடு வழங்கப்பட்ட நிலையில் ஒரு வருடம் கடந்த பிறகும் அந்த வீட்டிற்கு தான் இன்னும் குடிப்பெயரவில்லை என்று நிகழ்ச்சி ஒன்றில் அருணா பேசியிருக்கிறார்.

அதற்கான காரணம் என்ன என்பது பற்றியும் அவர் அதில் கூறி இருக்கிறார்.

சூப்பர் சிங்கரில் ஒன்பதாவது நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக அருணா தேர்வு செய்யப்பட்டார். 

அவரை தொடர்ந்து பிரியா ஜெர்சன் இரண்டாவது இடத்தை பிடித்தார். அதுவரைக்கும் 8 சீசன்களாக ஆண்கள் மட்டுமே சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னராக இருந்த நிலையில் ஒன்பதாவது சீசனில் தான் ஒரு பெண் போட்டியாளராக அருணா வெற்றி பெற்று இருந்தார்.

இந்த நிகழ்ச்சி முடிவடைந்து ஒரு வருடம் கடந்துவிட்ட நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அருணா பேசும் போது நான் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தந்த வீட்டிற்கு இன்னும் போகவில்லை. பொதுவாக பெரிய மனசு பண்ணி ஒரு கிப்ட் ஒருத்தங்க தராங்கன்னா அதற்கும் சில வரிகள் கட்ட வேண்டியது இருக்கு.

எனக்கு சூப்பர் சிங்கரில் வெற்றி பெற்றதற்காக 50 லட்சத்திற்கு மேலே மதிப்புள்ள ஒரு வீடு தந்தாங்க. அதற்கு நாங்களும் லட்சக்கணக்கில் வரி கட்ட வேண்டியது இருந்தது. ஆனால் எங்கள் குடும்பத்தின் சூழ்நிலையால் என்னால் அந்த பணத்தை முழுமையாக கட்ட முடியாது.

அதனால் இப்ப வரைக்கும் கொஞ்சம் கொஞ்சமாக தான் கட்டிக் கொண்டிருக்கிறோம். விரைவில் மொத்த பணத்தையும் கட்டி முடித்ததும் அந்த வீட்டிற்கு குடி பெயர்ந்து விடுவோம். நாங்கள் கொஞ்சம் கொஞ்சமாக கட்டுகிறோம் என்று பர்மிஷன் வாங்கி இருக்கிறோம் என்று அருணா கூறி இருக்கிறார்.

ஆனால் 60 லட்சம் வீட்டிற்கு சுமார் 15 லட்சத்திற்கு மேலாக டேக்ஸ் கட்ட வேண்டியது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகளில் வீடு பரிசு கொடுக்கும் நபர்கள் எளிதாக போட்டியாளர்களுக்கு சென்றடையும் வகையில் கொடுத்தால் இது போன்ற சிக்கல்கள் அவர்களுக்கும் வராது என்பது பலருடைய கருத்தாக இருக்கிறது.