சென்னை குரோம் பேட்டை பாலாஜி மருத்துவமனை மாணவர்கள் 200 மருந்துகளின் பயனை எடுத்துரைத்தனர்.!
Chennai balaji hospital
https://youtu.be/xmCTwgosyhc?si=L9iN3KcFH7VQJJD7
சென்னை குரோம்பேட்டை பாலாஜி பார்மஸி கல்லூரி மாணவர்கள் 200 மருந்துகள் குறித்து தொடர்ச்சியாக 8 மணி நேரம் எடுத்துரைத்து உலக சாதனை படைத்துள்ளனர்
சென்னை அடுத்த குரோம்பேட்டை பாலாஜி மருத்துவ கல்லூரி பேக்கல்டி ஆப் பார்மஸி டிபார்ட்மெண்ட் மாணவி மாணவர்கள், உணவில் என்னென்ன சேர்த்துக் கொள்ள வேண்டும் மருந்து உட்கொள்ளும் பொழுது என்ன எடுத்துக் கொள்ள வேண்டும் எடுத்துக் கொள்ளக்கூடாது எப்படி மருந்து உட்கொண்டால் நமக்கு பலன் கிடைக்கும் மருந்துகளின் வகைகள் அதன் மூலக்கூறுகள் என்ன என்பது குறித்து தொடர்ந்து எட்டு மணி நேரம் பேசி உலக சாதனை படைத்துள்ளனர் இதனை கலாம் வேல்ட் ரெக்கார்ட் அமைப்பு பதிவு செய்தனர்,
200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மருந்து குறித்து எடுத்துரைத்தனர், நம்ம உட்கொள்ளும் மருந்துகள் என்ன எதற்காக சாப்பிடுகிறோம் அதனை உட்கொண்டால் நமக்கு என்ன நடக்கும் அது எப்படி உணவில் மாற்றங்களை தரும் நாம் சாப்பிடும் உணவு மருந்தில் எப்படி மாற்றம் தரும் என்பதை 8 மணி நேரம் விரிவாக எடுத்துரைத்து வேர்ல்ட் ரெக்கார்ட் செய்துள்ளனர்,
மேலும் மாணவர்கள் 200 முதல் 250 மருந்துகள் குறித்து கற்றுக் கொள்வார்கள், இதனால் பொதுமக்கள் மருந்து உட்கொள்ளும் போது உணவை எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த தெளிவு அடைவார்கள் என பேக்கல்டி பார்மஸி மருத்துவமனை இயக்குனர் தீபா தெரிவித்தார்,
பேட்டி,
மருத்துவர் தீபா