வேளச்சேரியில் அனுமதியின்றி 10 க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் கல்லா கட்டும் போலீசார். !

சென்னை

வேளச்சேரியில் அனுமதியின்றி 10 க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் கல்லா கட்டும் போலீசார். !

வேளச்சேரியில் அனுமதியின்றி 10 க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் கல்லா கட்டும் போலீசார். 

ஸ்பா என்ற பெயரில் பாலியல் தொழில் தலைவிரித்தாடுகிறது.

சீரழியும் பள்ளி கல்லூரி மாணவர்கள். 

சென்னை வேளச்சேரி காவல் நிலைய எல்லைகுட்பட்ட பல்வேறு பகுதிகளில் உரிய அனுமதியின்றி  10க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் நடைபெற்று வருகிறது. 

ஸ்பா, சலூன் என்ற பெயர்களை பயன்படுத்திக் கொண்டு சட்டவிரோதமாக உரிய அனுமதியில்லாமல் பாலியல் கூடங்களாக செயல்பட்டு வருகின்றது. 

இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அங்கு சென்று தங்கள் வாழ்வை சீரழித்துக் கொள்கின்றனர்.

பல வருடங்களாக தங்கு தடையின்றி எப்படி காவல் நிலையம் அருகிலேயே நடத்துகிறார்கள் என கள ஆய்வு செய்து பார்த்த போது, விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் முதல் உள்ளூர் போலீஸ், அரசியல்வாதிகள் வரை அனைவருக்கும் மாதா மாதம் தக்க சன்மானம் வழங்கப்படுவதால் அதனை காவல்துறை கண்டுகொள்வதில்லை என தெரியவந்துள்ளது.

வேளச்சேரி பிரதான சாலையில் ராயல் கிங் பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா, எவர் யூத் சலூன் அண்ட் ஸ்பா, நாடார் தெருவில் ஆயுர்வேதிக் தெரபி, 

அதே போல் வேளச்சேரி 100 அடி சாலையில் பாரத் பெட்ரோல் பங்க் அருகில், ஐஓபி வங்கி மாடியில், வெட்டிங் பிரியாணி மாடியில், புதிய மேம்பாலம் அருகில் என 10க்கும் மேற்பட்ட சட்டவிரோத பாலியல் கூடங்கள் காவல்துறையினருக்கு தெரிந்தே செயல்படுவது தான் அதிர்ச்சியான தகவல். 

உடனடியாக காவல்துறை அதிகாரிகள் இதனை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

செய்தியாளர்

        S S K