மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி வார்த்தைகளை மை பூசி அழித்த திமுக. ! 

சென்னை

ஆலந்தூரில் திமுகவினர் மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள இந்தி வார்த்தைகளை மை பூசி அழித்தனர். 

சென்னை ஆலந்தூர் ஜி.எஸ்.டி.சாலையில், திமுகவினர் போஸ்ட் ஆபீஸ், பி.எஸ்.என்.எல்.அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இந்தி வார்த்தைகளை மை பூசி அழித்தனர். 

மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழிவதும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வரும் நிலையில், ஆலந்தூரில் மத்திய அரசு தொடர்புடைய அலுவலகங்களில் இந்தி வார்த்தைகள் அழிக்கப்பட்டு வருகிறது. 

தமிழ் வாழ்க, தமிழகம் வாழ்க, இந்தி ஒழிக என பேசி இந்தி வார்த்தைகளை அழித்தனர்.

செய்தியாளர்

S S K