காவலாளி மீது நுழைவு வாயில் இரும்பு கேட் விழுந்து பரிதாபமாக பலி.!
சென்னை

சோழிங்கநல்லூரில் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி மீது நுழைவு வாயில் இரும்பு கேட் விழுந்து பரிதாபமாக பலி.!
சென்னை சோழிங்கநல்லூர், எல்காட் அவென்யூவில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஆறு மாத காலமாக காவலாளியாக வேலை பார்த்து வருபவர் அன்பரசு(65), நேற்று இரவு பணியில் இருந்த போது நுழைவு வாயில் இரும்பு கேட்
காவலாளி மீது விழுந்துள்ளது.
இதில் கேட்டுக்குள் சிக்கிக் கொண்ட காவலாளி வெளியே வர முடியாமல் சத்தம் போடவே, அருகில் இருப்பவர்கள் பார்த்து விட்டு கேட்டை தூக்கி, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து செம்மஞ்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர்.