விஜய் திரிஷா விமானத்தில் சென்ற வீடியோ வெளியானதை மறைமுகமாக சுட்டிக் காட்டி விமர்சித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்.!
சென்னை

விஜய் திரிஷா விமானத்தில் சென்ற வீடியோ வெளியானதை மறைமுகமாக சுட்டிக் காட்டி விமர்சித்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்.
சீமான் ஆளையே காணோம் எங்களை அழிக்க நினைப்பவர்கள் ஒழிந்து போவார்கள்.
அதிமுக இரட்டை வேடம் போடுவதாக அமைச்சர் விமர்சனம்.
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்து கொண்டார் நிகழ்ச்சியில் பல்லாவரம், தாமபரம் சட்டமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் :- 5 ஆண்டுகளில் 2019 முதல் தற்போது வரை தளபதிக்கு ஆட்சி நடத்துவதிலும் கட்சி நடத்துவதிலும் பக்கபலமாக இருப்பவர் தம்பி உதயா, 100 ஆண்டுகள் வாழ்ந்து இந்த இயக்கத்தை வழிநடத்துவார் என வாழ்த்துகிறேன், அண்ணாபல்கலை கழகத்தில் ஒரு மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டார் 2 மணி நேரத்தில் கைது செய்து உள்ளே தூக்கி போட்டோம், உங்க ஆட்சியில் பொள்ளாட்சியில் என்ன நடந்தது.
அதிமுக ஆட்சியில் மழை வடிய 10 லிருந்து 15 நாட்கள் ஆகும், தற்போது திமுக ஆட்சியில் அரை மணி நேரத்தில் வடிந்து விடும்.
வெளிநாட்டில் இருந்து ஒருத்தர் வந்திருக்காரு ஜாட்டியில் அடிச்சிக்க போராறாம் நாளைக்கு நீ அடிச்சிக்காதே எங்க கிட்ட கொடு ஜாட்டியை, நீ அடுச்சிக்கிட்டா உரைக்காது, எங்ககிட்ட கொடு நாங்க அடிக்கிறோம், இனி நீ செருப்பே போட போவதில்லை, திமுக தொண்டன் நினைத்து விட்டால் முடிக்காமல் விட மாட்டான் தலைவர் ஆணையிட்டு விட்டார் 2026ல் 200 தொகுதியில் வெற்றி பெறுவோம். உங்களை ஒழித்து விட்டு தான் அடுத்த வேலை,
சீமான் இப்போ ஆளையே காணோம், எல்லாம் வெளியே போய்ட்டான், இப்போ நடு ரோட்டில் நின்று கொண்டிருக்கிறான், எங்களை விமர்சனம் செய்பவர்களை நாங்கள் அழிக்க வேண்டியதில்லை நீங்களே ஒழிந்து போய் விடுவீர்கள்,
1.17 கோடியே பேர் 1000 ரூபாய் வாங்குகிறார்கள், விரைவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் 1000 ரூபாய் பணம் பெற்றுத் தருவோம்.
100 நாள் வேலை திட்டத்தில் 3000 கோடி மத்திய அரசு தரவில்லை,
பாப்கார்ன் 15% ஜி.எஸ்.டி போடுகிறீர்களே நீங்கள் எல்லாம் உருபடுவீர்களா,
மெட்ரோ பணி நடக்கிறது பாதி பணம் தரவில்லை ஒன்றிய மோடி அரசு,
உலகத்தில் 127 நாடு பட்டினியில் இருப்பதாக கணக்கு சொல்லுது, இந்தியா 105 வது இடத்தில் உள்ளது அதில் இரண்டு வேலை சாப்பிடும் மாநிலம் தமிழ்நாடு, கேரளா தான்,
கிராமங்களில் தேர்தல் வேலை பார்த்தோம் அங்கு கடந்த அதிமுக 10 ஆண்டு கால ஆட்சியில் ரோடு இல்லை, லைட் இல்லை,
கலைஞர் 20 கிலோ அரிசி தரவில்லை என்றால், ஸ்டாலின் 1000 ரூபாய் தரவில்லை என்றால் பல ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பட்னியாக தான் இருப்பார்கள் என்றார்.
இதை மீடியா அமைச்சரின் ஆணவப் பேச்சு என போடுவார்கள் செய்ததை சொல்ல வேண்டாமா,
அமித்ஷா அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசினார் நாம் போராட்டம் நடத்தினோம், அதிமுக ஒரு போராட்டம் நடத்தினார்களா, கண்டனம் தெரிவித்தார்களா, டங்ஸ்டன் விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவார்கள் அதிமுக,
ஆட்சி இருந்தாலும் இல்லை என்று சொன்னாலும் மக்களோடு மக்களாய் இருப்போம் வாழ்வோ சாவோ உங்களோடு இருப்பது திமுக காரன் தான் உங்களுக்கு பாதுகாப்பாய் இருப்போம்.
அதிமுகவினர் ஆளே இல்லை, போன 10 ஆண்டு ஆட்சியின் போதே இல்லை,
நடிகர் எல்லாம் வருவான் புதுசு புதுசா, யோக்கியதில்லை பிளைட்டில் ஒரு ஆளை அழைத்து போகிறார், இவனெல்லாம் நாட்டை காப்பாற்றுபவனா, இதுவரைக்கும் ஒரு புடி மண்ணை எடுத்து போட்டுருப்பானா, சும்மா சினிமா மாதிரி பொதுமக்களுக்கு எதுவும் செய்ய மாட்டாங்க, படம் பாரு நம்ம காசுல பார்க்கிறோம் ரசி அதோடு அதை மறந்துறனும் என்றார்.
S S K