உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குரோம் பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு மோதிரம்
குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் மோதிரம் அணிவித்தார்.
இதற்காக வந்த திமுகவினர் கார்களை வழியிலேயே நிறுத்தியதால் ஆம்புலன்ஸ் செல்ல முடியாமல் அவதி.
சென்னை குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் தா.மோ.அன்பரசன் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தும், பழக்கூடை வழங்கியும் மகிழ்ந்தனர். உடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி உள்ளிட்ட திமுகவினர் இருந்தனர்.
இந்நிகழ்விற்காக வந்திருந்த திமுகவினர் தங்களது கார்களை மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவிற்கு செல்லும் வழியிலேயே நிறுத்தினர்.
இதனால் ஆம்புலன்ஸ் வெளியில் இருந்து உள்ளே செல்ல முடியாமலும், உள்ளே இருந்து வெளியில் வர முடியாமல் சிக்கிக் கொண்டது. பின்னர் கார்களை எடுக்க அறிவுறுத்திய பின் ஆம்புலன்ஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
துணை முதல்வர் பிறந்தநாளை கொண்டுவது தவறில்லை ஆனால் நோயாளிகள் செல்லும் ஆம்புலன்சிற்கு வழி கூட இல்லாமல் கார்களை வழியில் நிறுத்தி இடையூறு செய்வது நியாயமா என பொதுமக்கள் புலம்பிக் கொண்டனர்.