தே மு தி க சார்பில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் மக்கள் நல உதவிகள். !

வேளச்சேரி

வேளச்சேரி காந்தி சாலையில் தேமுதிக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது

சென்னை வேளச்சேரி காந்தி சாலையில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 177 வட்டம் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முக மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா 177 வது வட்ட கழக செயலாளர் எஸ்.ஸ்டாலின் ஏற்பாட்டில் நடைபெற்றது.

வேளச்சேரி மேற்கு பகுதி கழகச் செயலாளர் ஸ்டீல்.டி. கர்ணா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தென்சென்னை தெற்கு மாவட்ட தேமுதிக செயலாளர் வி.கோ சூர்யா கலந்து கொண்டு உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் கோடை வெயிலின் தாகத்தை தணிக்கும் வகையில் அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணிகளையும் வழங்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்ச்சியில் வட்ட கழக செயலாளர்கள் ரகுபதி, ராமு, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் டி.கலா, பி.ஸ்.கோபால், டி.கண்ணன் மற்றும்  வட்ட கழகத்தை சேர்ந்த சுப்பையா, சரவணன் உள்ளிட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

      S S K