பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதிகேட்டு கண்ணை கட்டிக் கொண்டு, கையில் சிலம்புடன் பாஜக மகளிரணியினர் அமைதி போராட்டம்.!
சென்னை

மடிப்பாக்கத்தில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அண்ணா பல்கலைகழக மாணவிக்கு நீதிகேட்டு கண்ணை கட்டிக் கொண்டு, கையில் சிலம்புடன் பாஜக மகளிரணியினர் அமைதி போராட்டம்.
சென்னை மடிப்பாக்கத்தில் பாஜக மகளிரணி சார்பில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் அண்ணா பல்கலைகழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நீதிதேவதை கண் கட்டப்பட்டிருப்பதை போன்று தங்களது கண்களை கட்டிக் கொண்டு, கண்ணகி கையில் சிலம்பு வைத்துள்ளது போல் கையில் சிலம்பை வைத்துக் கொண்டு நூதன முறையில் அமைதியாய் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்கலைகழக மாணவிக்கு நீதி கிடைக்க வேண்டும், தமிழகம் முழுவதும் பெண்கள் பாலியல் இன்னல்களுக்கு ஆளாவதாகவும் அவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை வைத்தனர்.
S S K