அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டது கேலி கூத்தானது! திரு முருகன் காந்தி.!

தஞ்சாவூர்

அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டது கேலி கூத்தானது! திரு முருகன் காந்தி.!

அண்ணாமலை சாட்டையால் அடித்து கொண்டது கேலி கூத்தானது! திருமுருகன்காந்திபேச்சு!

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே கபிஸ்தலம் பாலக்கரையில் தந்தை பெரியார், அம்பேத்கர், தோழர் கிட்டு(எ) லெனின் நினைவேந்தல் பொது கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் ஜெயராமன், விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன், திராவிட கழக குடந்தை மாவட்ட கழக செயலாளர் துரைராஜ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹ்மத் அலி உட்பட பலரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

நிகழ்ச்சியில் மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு முருகன் காந்தி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

இதில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை சில நாட்களுக்கு முன்பு தன்னை சாட்டையால் அடித்துக் கொண்டது கேலி கூத்தானது என்றும் மத்திய அரசு மற்ற மாநிலங்களையும் தமிழ்நாட்டையும் வஞ்சிக்கும் செயலை மறைக்கும் விதமாக இந்த நிகழ்வினை அண்ணாமலை நிகழ்த்தி வருகிறார்.

முன்னதாக தோழர் கிட்டு (எ) லெனினின் வரலாறு புத்தகம் வெளியிடப்பட்டது. முடிவில் கிருபாகரன் நன்றி கூறினார்.

பாபநாசம் இன்பம்