கள்ள மனைவியுடன் உறவு வைத்த நண்பனை அடித்துக் கொன்ற இளைஞர்.!
குற்றம்

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்தவர் ரித்திஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 30 வயதான இவருக்கு கார்த்திகா (பெயர் மாற்றம்) என்ற திருமணமான பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. நாளடைவில் இவர்கள் அடிக்கடி சந்தித்து பேசி வந்தனர். தொடர்ந்து இருவரும் கணவன் மனைவியாக வாழ தொடங்கினர். இதற்காக தனி வீடு ஒன்றை பார்த்து ரித்திஷும், கார்த்திகாவும் ஒன்றாக வசித்து வந்தனர்.
இவர்களது வாழ்க்கை சுமுகமாக சென்றுகொண்டிருந்தது. திருமணமான பெண் என்றாலும், கார்த்திகாவோடு ரித்திஷ் மகிழ்ச்சியாகவே வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் தனது நண்பர் ராஜா (பெயர் மாற்றம்) என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார் ரித்திஷ். மேலும் நண்பர் தானே என்று அவரை சம்பவத்தன்று இரவும் ஒரே வீட்டில் தங்க வைத்து இருக்கிறார்.
நம்பிக்கையோடு தங்க வைத்த நண்பர் ரித்திஷுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றை செய்துவிட்டார் ராஜா. அதாவது சம்பவத்தன்று 3 பேரும் ஒரே வீட்டில் ஒன்றாக உணவு சாப்பிட்டு விட்டு தூங்க சென்றனர். நண்பர் தனியாக படுக்க கூடாது என்பதற்காக மனைவியை வேறு ரூமில் தூங்க வைத்துவிட்டு ராஜாவுடன் ரித்திஷ் தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது நள்ளிரவில் திடீரென ரித்திஷ் கண் விழித்து பார்த்துள்ளார்.
அப்போது அவர் பார்த்த காட்சி அப்படியே அவரை உறைய வைத்து விட்டதாம். நண்பர்.. நண்பர் என்று பழகிய ராஜாவும் கார்த்திகாவும் ஒரே அறையில் உல்லாசமாக இருந்ததை பார்த்து விட்டார். இதனால் ஆத்திரத்தின் எல்லைக்கே சென்ற ரித்திஷ் ராஜாவை சரமாரியாக தாக்கினார். கள்ளக்காதலி கார்த்திகாவையும் சரமாரியாக தாக்கினார். இருவரும் வலி தாங்க முடியாமல் கத்தி கூச்சலிட்டனர்.
இதற்கிடையே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது ராஜா வலி தாங்க முடியாமல் வீட்டை விட்டு தப்பி செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை பிடித்தனர். பலத்த காயம் அடைந்து இருந்ததால், ராஜாவை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் ரித்திஷ் மற்றும் கார்த்திகாவை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். இதற்கிடையே ராஜா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதையடுத்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ரித்திஷ் மற்றும் கார்த்திகாவை கைது செய்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்