திருமண விழாவில் 30 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் திருட்டு ஒருவர் கைது.!
Crime

ஈ சி ஆரி ல் ஓய்வு ஐ ஏ எஸ் அதிகாரி இல்ல திருமண விழாவில் 30 லட்சம் மதிப்பிலான வைர, தங்க நகைகள் திருட்டு போன சம்பவத்தில் திருச்சி ராம்ஜி நகர் கொள்ளையன் கைது
தலைமறைவான மற்றொரு நபரை தேடி வருகின்றனர்.
எம்பிஏ பட்டதாரியான சுதர்சன், பத்தாண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சென்னை அடையார் இந்திரா நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சண்முகம்
இவரது(மகன் ஆனந்த முரளி) மகன் வழி பேத்திக்கு நீலாங்கரை வெட்டுவாங்கேணியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த ஐந்தாம் தேதி திருமணம் நடைபெற்றது.
மூன்றாம் தேதி முதலே ஐஏஎஸ் அதிகாரியின் குடும்பத்தினர் மண்டபத்தில் தங்கி திருமண ஏற்பாடுகளை கவனித்து வந்தனர்.
ஐந்தாம் தேதி காலை 8.30மணிக்கு மணமேடைக்கு செல்வதற்கு முன்,
மணமகள் தங்க வைர ஆபரணங்களை அணிவதற்காக, மண்டபத்தில் இருந்த அறைக்குள் சென்றார்.
அப்போது அங்கிருந்த இரண்டு வைர நெக்லஸ்கள் வைரத்தோடுகள் தங்க நகைகளை காணவில்லை.
இவற்றின் மதிப்பு 30 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
இது தொடர்பாக மணமகள் தனது தந்தை ஆனந்தமுரளியிடம் தெரிவித்தார்.
நிலைமையை உணர்ந்த மாப்பிள்ளை வீட்டார், திருமணத்தை முதலில் நல்லபடியாக நடத்துவோம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறினர்.
இதையடுத்து திருமணம் நல்லபடியாக நடந்தேறியது.
இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்த முரளி நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில், டிப்டாப் உடை அணிந்து வந்த இரண்டு பேர் அறைக்குள் புகுந்து நகையை திருடிச் சென்றது தெரிய வந்தது.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள், இருசக்கர வாகன பதிவெண், செல்போன் சிக்னலை வைத்து ஆய்வு செய்ததில் கைவரிசை காட்டியது ராம்ஜி நகர் கொள்ளையர்கள் என தெரியவந்தது.
ராம்ஜி நகர் விரைந்த நீலாங்கரை தனிப்படை போலீசார், அங்கு அருகில் உள்ள கிராமத்தில் பதுங்கி இருந்த கொள்ளையன் சுதர்சன்(31), என்பவரை கைது செய்தனர்.
மற்றொரு கொள்ளையன் கார்த்திக்(23), போலீசாரை கண்டதும் தப்பி ஓடி விட்டான். அவனை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கைதான சுதர்சன் எம்பிஏ பட்டதாரி ஆவார். பத்தாண்டுகளுக்கு மேலாக திருட்டு தொழிலில் ஈடுபட்டு வந்தாலும் பெரும்பாலும் போலீசில் சிக்கியது இல்லை.
பத்தாண்டுகளாக திருட்டு தொழிலில் ஈடுபடும் இவர் மீது இரண்டு வழக்குகள் மட்டுமே உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கிழக்கு கடற்கரை சாலையில் தங்கி, அங்குள்ள ரிசார்ட்கள், திருமண மண்டபங்களை நோட்டமிட்டு கைவரிசை காட்டி வந்துள்ளனர்.
கைதான சுதர்சனிடமிருந்து போலீசார் 10.5 சவரன் நகைகளை மீட்டனர்.
S S K