தங்கம் விலை 2,000 குறைந்தது மேலும் தற்போது சவரனுக்கு 680 குறைந்துள்ளது. !

தங்கம் விலை சரிவு

தங்கம் விலை 2,000 குறைந்தது மேலும் தற்போது  சவரனுக்கு 680 குறைந்துள்ளது. !

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 குறைந்து விற்பனையாகிறது.

சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப இந்தியாவில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அவ்வப்போது விலை உயர்வதும் , குறைவதுமாக போக்கு காட்டி வரும் தங்கம் விலை, இந்த வாரம் தொடங்கியதில் இருந்தே தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2000 குறைந்திருக்கிறது. கடந்த திங்கள் கிழமையன்று சவரனுக்கு ரூ.40 குறைந்த நிலையில், செவ்வாய் கிழமையன்று சவரனுக்கு ரூ.600 குறைந்து ஒரு சவரன் ரூ.73,240க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.75 குறைந்து ரூ. 9,155க்கு விற்பனையானது.

தொடர்ந்து 3வது நாளாக கடந்த புதன் கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ஒரு சவரன் ரூ.72,560க்கும் ,கிராமுக்கு 85 குறைந்து ஒரு கிராம் ஆபரணத்தங்கம் ரூ.9,070க்கு விற்பனையானது. அன்றைய தினம் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120க்கு விற்பனையாகிறது. ஆனால் நேற்றைய தினம் ( வியாழக்கிழமை) தங்கம் மற்றும் வெள்ளி விலை மாற்றமின்றி அதே விலையில் விற்பனையானது.

இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து 71,880க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.85 குறைந்து ஒரு கிராம் ரூ.8,985க்கு விற்கப்படுகிறது. அதேபோல் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.120 என அதே விலையில் நீடிக்கிறது.