முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பொங்கல் வாழ்த்து கூறிய தொல் திருமாவளவன்.!
தமிழகம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை விசிக தலைவர் தொல் திருமா நேரில் சந்தித்து விசிக - வின் பொதுச்செயலாளர் ரவிக்குமாருக்கு, 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் அண்ணல் அம்பேத்கர் விருது அறிவிக்கப்பட்டதற்காக விசிக சார்பில் நன்றி தெரிவித்து, பொங்கல் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.
தலைமைச் செயலகத்தில் செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் உரையாற்றாமல் புறக்கணிப்பு செய்ததைப் பற்றிய கேள்விக்கு
தமிழ்நாடு சட்டமன்றத்தில் இறுதியாக தேசிய கீதம் இசைக்கப்படுவது மரபு என்றும் ஆளுநர் தமிழ்நாடு சட்டமன்ற மரபை அவமதித்திருப்பது கண்டனத்துக்குரியது என்றும் ஆளுஞரின் இச்செயலை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம் என பதிலுரைத்தார் தொல் திருமா.
மேலும் சிபிஐஎம் கட்சியின் மாநில செயலாளராக பொறுப்பேற்றிருக்கும் சண்முகத்தை சந்தித்து வாழ்த்து கூறினார்.
உடன் கட்சியின் பொதுச்செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னணி பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
தகவல்
வி.ஆர். ஜெயந்தி
மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலாளர் ( விசிக )