தி மு க - விற்கு அழைப்பு கொடுத்த தே மு தி க .!
தமிழகம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (23.12.2024) காலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள தி மு கழக அலுவலகத்தில் தே.மு.தி.க. கட்சியின் துணை பொதுச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ் , பார்த்தசாரதி, வி.விஜய பிரபாகரன் மற்றும் இளைஞரணி செயலாளர் நல்லதம்பி ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
https://www.newstodaytamil.com/NTK-Vs-DMK
இந்த சந்திப்பில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் டிசம்பர் 28 ஆம் தேதி அனுசரிக்கப்பட உள்ளதையொட்டி, அந்நினைவு தின நிகழ்வில் பங்கேற்க முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.
சந்திப்பின் போது கழகப் பொதுச்செயலாளர் துரைமுருகன், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் உடனிருந்தனர்.