பாத பூஜை சர்ச்சை வீடியோ.! ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது.!

தமிழகம்

பாத பூஜை சர்ச்சை வீடியோ.! ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது.!

திமுக இளைஞரணி தலைவரும், தமிழகத் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. 

இதுகுறித்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இதற்கிடையே, ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று சொன்னதால், 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வி அடையும் அபாயம் இருப்பதாக ஜோதிடர் ஒருவர் கூறியதாகவும், இதற்கு பரிகாரமாக ஸ்ரீபெரும்புதூர் ஜீயருக்கு பாத பூஜை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாத பூஜை செய்ததாகவும் ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பெரும் பூகத்தை கிளப்பிய நிலையில், இது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த நிலையில், ஸ்ரீபெரும்புதூர் ஜீயர் குறித்து அவதூறாக பேசியதாக ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ஸ்ரீரங்கம் ரங்கராஜன் நரசிம்மன் பல்வேறு சர்ச்சை விவகாரங்களில் அவதூறு கருத்துக்களை தெரிவித்து, கைது செய்யப்பட்டு, ஜாமினில் விடுதலையாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நீதிமன்றம் அவருக்கு கடுமையான கண்டனங்களையும் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.