கீரனூர் அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீரனூர் அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீரனூர் அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார்.


இதில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (13.11.2024) தலைமைச் செயலகத்தில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில்               ரூ.190.40 கோடி மதிப்பீட்டில் 18 திருக்கோயில்களில் 25 புதிய திட்டப் பணிகள் மற்றும் 4 அலுவலகக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ.42.75 கோடி செலவில் 15 திருக்கோயில்களில் 25 முடிவுற்ற திட்டப் பணிகள் மற்றும் 2 அலுவலகக் கட்டடங்களை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

அதன்படி, திண்டுக்கல் மாவட்டம், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் உபகோயிலான கீரனூர் அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் ரூ.3.80 கோடி மதிப்பீட்டில் புதிய திருமண மண்டபம் கட்டும் பணியை காணொளி வாயிலாக தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

அதனைத்தொடர்ந்து கீரனூர் அருள்மிகு வாகீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற விழாவில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார்.

இவ்விழாவில், பழநி சார்-ஆட்சியர் கிஷன்குமார், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சத்தியபுவனா இராஜேந்திரன், திண்டுக்கல் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கார்த்திக், பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் துணை ஆணையர் வெங்கடேசன், உதவி ஆணையர்  இலட்சுமி, கீரனுார் பேரூராட்சி தலைவர் கருப்பசாமி, துணைத்தலைவர் அப்துல் சுப்பு, நிர்வாக அலுவலர் அன்னலட்சுமி, கீரனுார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் அரிகரசுதன், முக்கிய பிரமுகர் சுப்பிரமணியன், செயற்பொறியாளர் பிரேம்குமார், உதவி செயற்பொறியாளர் கண்ணன், உதவிப்பொறியாளர்கள் முத்துராஜா, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், பொதுமக்கள்  என பலர் கலந்து கொண்டனர்.

அழகர் சாமி