பம்மலில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர் செய்யும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்
பம்மலில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி வெறும் கைகளால் கழிவுநீர் கால்வாய் அடைப்பை சீர் செய்யும் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்
ஏற்கனவே கடந்த 7ம் தேதி வெறும் கைகளால் சாக்கடை அள்ளிய நிலையில் இன்றும் சாக்கடை அள்ள வைத்த அவலம்.
தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் அடுத்த பம்மல், முத்துஷா தெருவில் உள்ள கழிவுநீர் கால்வாயில் மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் கையுறை, முகக்கவசம், காலணி உள்ளிட்ட எவ்வித பாதுகாப்பு உபகரணமுமின்றி வெறும் கைகளால் சாக்கடை அடைப்பை சரிசெய்து கொண்டிருக்கிறார்.
இதனால் நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
மனிதர்களே மனித கழிவை அள்ளக்கூடாது என நீதிமன்றம் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் இது போன்ற அவலங்கள் நடந்த வண்ணம் உள்ளன.
தாம்பரம் மாநகராட்சி நிர்வாகம், இது போன்ற செயல்களில் ஈடுபட வைக்கும் ஒப்பந்ததாரர் மற்றும் கண்காணிக்காத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுகிறது.
இதே போல் கடந்த 7ம் தேதி பம்மல், முத்துமாரியம்மன் கோயில் தெருவில் இதே முதியவர் கால்வாயில் சாக்கடை அள்ளியது தொடர்பாக செய்தி வெளியான நிலையில் மீண்டும் அதே நபர் சாக்கடையை வெறும் கைகளால் அள்ளி வருவது குறிப்பிடத்தக்கது.
S S K