பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கி வரும் பேனர் கலாச்சாரம், மீண்டும் உயிர் பலி வாங்க துடிக்கிறதா

பல்லாவரத்தில் மீண்டும் தலை தூக்கி வரும் பேனர் கலாச்சாரம், மீண்டும் உயிர் பலி வாங்க துடிக்கிறதா

மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட விளம்பர தட்டிகளை துணை முதல்வரை வரவேற்று திமுகவினர் வைத்துள்ளனர்.  

சென்னை அடுத்த தாம்பரம் மாநகர திமுகவின் பம்மல் வடக்கு பகுதி செயலாளர் திருநீர்மலை  ஜெயக்குமார் இவரது மனைவி சண்முகசுந்தரி தாம்பரம் 29வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆகியோரின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இன்று மாலை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது 

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எம்பிக்கள், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அரசியல் பிரமுகர்கள் கூட்டணி கட்சி தலைவர்கள், திமுக நிர்வாகிகள் வருகை தர உள்ளனர்.

இதற்காக பல்லாவரம் மேம்பாலத்தில் இருந்து திருமண மண்டபம் வரை சுமார் மூன்று கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட விளம்பர தட்டிகள், சாலையை ஒட்டி வைக்கப்பட்டுள்ளது இதனால் அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் பொதுமக்களுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  

கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் என்பவர் இல்லத்திருமண விழாவில் இதே ரேடியல் சாலை தடுப்பில் வைக்கப்பட்ட விளம்பர பேனரால் விபத்து ஏற்பட்டு ஐடி பெண் ஊழியர் இளம்பெண் சுபஸ்ரீ பரிதாபமாக உயிரிழந்தார். இதன் எதிரொலியாக திமுக தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அனுமதியில்லாமல் விளம்பர பேனர் வைக்கமாட்டோம் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். 

ஆனால் தற்போது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்காக மீண்டும் பிரமாண்டமாக விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது, இதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர். 

இது குறித்து தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திடம் கேட்ட போது எவ்வித அனுமதியும் வழங்கவில்லை என தெரிவித்தனர்.

S S K