பேட்மிண்டன் போட்டி உலக தரவரிசையில் இரட்டையிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார் சுதர்ஷன்..!
பாரா பேட்மிண்டன்

சேலம் மாவட்டத்தை சேர்த்த பாரா பேட்மிண்டன் விளையாட்டு வீரர் சுதர்ஷன், தன்னிடம் திறமை இருந்தும் பணம் இல்லாத காரணத்தால் சர்வதேச பாரா பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் இருந்தார்.
பின்னர் தமிழ்நாடு அரசின் சாம்பியன்ஸ் அறக்கட்டளை மூலம் சுதர்ஷனுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டது. அதன் பின்னர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தொடங்கினார்.
உலக தரவரிசையில் 58 வது இடத்தில் இருந்தவர், இன்று பாரா பேட்மிண்டன் போட்டி உலக தரவரிசையில் இரட்டையிர் பிரிவில் முதலிடத்தில் இருக்கிறார் சுதர்ஷன்.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் தொடக்க விழாவில் சுதர்ஷன் பங்கேற்ற போது நிகழ்ச்சித் தொகுப்பாளரும், ஊடகவியலாருமான ஹேமலதா ராக்கேஷ் அவர்களிடம் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
மாருதி மனோ