தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக, பூத் கமிட்டி அமைக்கும் பணி .!

அ தி மு க

தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக, பூத் கமிட்டி அமைக்கும் பணி .!

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, தெற்கு ஒன்றிய அதிமுக சார்பாக, பூத் கமிட்டி அமைக்கும் பணி கழகத் துணைப் பொதுச் செயலாளர் வேப்பனப்பள்ளி சட்டமன்ற உறுப்பினர் கே பி முனுசாமி, பூத் கமிட்டி உறுப்பினர்களிடம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை தெள்ளத் தெளிவாக கூறினார். 

நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர்  கே அசோக்குமார் அவர்கள் தலைமை ஏற்றார். ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் பொதுக்குழு உறுப்பினர் டி எம் தமிழ் செல்வம் அவர்கள் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய கழகச் செயலாளர் வேங்கன், முன்னாள் எம்எல்ஏ, கிருஷ்ணமூர்த்தி அவர்களும் மாவட்ட துணைச் செயலாளர் சாகுல், ஒன்றிய கழகச் செயலாளர்களும் மாவட்ட ஒன்றிய கிளைக் கழக பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ