ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா. !
கிருஷ்ணகிரி
பாரதியார் பிறந்த நாள் விழா.!
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியம், ஜோதிநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இன்று (11.12.2025) பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது. முன்னதாக பள்ளி இறை வணக்கக் கூட்டத்தில் பாரதியார் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
பின்னர் பள்ளித் தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் உதவி ஆசிரியர் சோ.சிவகுருநாதன் அனைவரையும் வரவேற்றார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் செ. இராஜேந்திரன் தமது தலைமை உரையில் பாரதியாரின் வாழ்க்கை, அவரின் பணிகள் ஆகியவை பற்றி விரிவாக பேசினார்.


பின்னர் ஒன்றிய அளவில் நடைபெற்ற கலைத் திருவிழா மற்றும் வானவில் மன்றப் போட்டிகளில் கலந்துக் கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
நிகழ்வில் உதவி ஆசிரியர்கள் மா.யோகலட்சுமி, ரா.ஜீவா, கணினி பயிற்றுநர் ச.மரகதம் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
செய்தியாளர்
மாருதி மனோ
