எஃப் எஸ் தேர்வில் 138 வது இடம் பிடித்த மாணவருக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி நேரில் வாழ்த்து.!
கிருஷ்ணகிரி

ஐ எஃப் எஸ் தேர்வில் 138 வது இடம் பிடித்த மாணவருக்கு அதிமுக துணை பொதுச் செயலாளர் கே பி முனுசாமி நேரில் வாழ்த்து.!
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏனுசோனை கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டன். இவரது மகன் சந்தோஷ், இவர் இந்தியன் பாரஸ்ட் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 138 இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து அறிந்த வேப்பனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் முன்னாள் அமைச்சர் கழக துணை பொதுச்செயலாளர் கேபி முனுசாமி அவர்கள் நேரில் சென்று மாணவரை பாராட்டி அவருக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி மென்மேலும் வளரவும் இந்திய நாட்டுக்கு சிறப்பாக பணியாற்றவும் வாழ்த்தினார்.
உடன் சூளகிரி கிழக்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியம், சூளகிரி மத்திய ஒன்றிய செயலாளர் மாதேஷ், வேப்பன்ஹள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், மற்றும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊர் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
செய்தியாளர்
மாருதி மனோ