அருள்மிகு ஜராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோவிலை ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்து புதுப்பித்தல்.!

கிருஷ்ணகிரி

அருள்மிகு ஜராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோவிலை ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்து புதுப்பித்தல்.!

இந்து சமய அறநிலையத்துறை சார்பாக, கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம் வேப்பனப்பள்ளி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சூளகிரி வடக்கு ஒன்றியம், அத்திமுகம் கிராமத்தில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான திருக்கோவிலான அருள்மிகு ஜராதீஸ்வரர் மற்றும் அழகேஸ்வரர் திருக்கோவிலை ரூ.1.31 கோடி மதிப்பீட்டில் பழுதுபார்த்து புதுப்பித்தல் திருப்பணி தொடக்க விழா நிகழ்வினை, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தனர்.

உடன் வேப்பனப்பள்ளி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் முருகன், சூளகிரி ஒன்றிய செயலாளர்கள் நாகேஷ், பாக்யராஜ், மாநில நிர்வாகி சீனிவாசன், தலைமை செயற்குழு உறுப்பினர் வீராரெட்டி, முன்னாள் மாவட்டத் துணைச் சேர்மன் ரஷீத் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்

மாருதி மனோ