சங்கரன்கோவில் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் .!
தென்காசி

சங்கரன்கோவில் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம்
தென்காசி அக் 10
தமிழ்நாடு மின் பகிர்மானகழகத்தின் சார்பில் திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்திற்குட்பட்ட சங்கரன்கோவில் கோட்டத்தின் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் என்.ஜி.ஓ காலனியில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்திற்கு திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி கலந்துகொண்டு பொதுமக்கள் அளித்த புகார்களுக்கு உடனடியாக வாரிய விதிமுறைகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க செயற் பொறியாளர் சங்கரன்கோவில் கோட்டம், பாலசுப்பிர மணியன் மற்றும் ஏனைய அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் கோட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மின் பொறியாளர்களும் கலந்து கொண்டனர். மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் முகாம் முடிந்தவுடன் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மத்தியில் மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி பேசும் பொழுது வடகிழக்கு பருவ மழை நாட்களில் சீரான மின் விநியோகத்தை உறுதி படுத்த வேண்டும் எனவும், தேவையான தளவாட சாமன்கள் போதிய அளவு கையிருப்பு வைப்பதற்க்கும், அவசரகால உதவி எண்கள் பொது மக்கள் பார்வையில் தெரியும்படியும் உப மின் நிலையங்கள், மின் விநியோக பாதைகள் , மின் விநியோக கட்டமைப்புகள் உட்பட அனைத்தையும் தொடர் கண்காணிப்புடன் விழிப்புடன் பணிகள் மேற்கொள்ளவும், பெருமழை மற்றும் அசாதரமான இயற்கை இடர் பாடுகளால் மின் விநியோக கட்டமைப்பு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் போர்கால அடிப்படையில் உடனுக்குடன் சரி செய்து சீரான மின்சாரம் வழங்கவும் அனைத்து மின் இணைப்புகளையும் தொடர்ச்சியாக ஆய்வு செய்து வாரிய விதிமுறைகளுக்கு முரணாக உள்ள மின் இணைப்புகளை முறைப்படுத்தவும், சங்கரன்கோவில் கோட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி மேம்பாட்டுப் பணிகளை விரைந்து முடிக்கவும், பொது மக்களிடையே சூரிய ஒளி மேற்கூரை மின் உற்பத்தி அமைப்பதற்கும் அதனால் ஏற்படும் பயன்கள் , மின் சிக்கனம், மின் பாதுகாப்பு, குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிட்டார்.
செய்தியாளர்
AGM கணேசன்