தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம் .!
தென்காசி

தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் வாக்கு திருட்டை கண்டித்து மாபெரும் கையெழுத்து இயக்கம்
தென்காசி அக் 10
பாஜக மோடி அரசுக்கு ஆதரவாக வாக்கு திருட்டு மற்றும் வாக்காளர் பட்டியல் முறை கேட்டில் ஈடுபட்ட தேர்தல் ஆணையத்தை கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கையெழுத்து இயக்கம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை ஆனையின்படியும், தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.பழனி நாடார் எம் எல் ஏ அறிவுறுத்தலின் பேரிலும், இன்று தென்காசி நகர காங்கிரஸ் சார்பில் தென்காசி செய்யது குருக்கள் பள்ளி வாசல் தெருவில் அமைந்துள்ள செய்யது குருக்கள் பள்ளிவாசலில் முன்புவெள்ளிக்
கிழமை தொழுகை முடித்து வெளியில் வந்த இஸ்லாமியர்களிடம் கையெழுத்து வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது,
இந்நிகழ்ச்சிக்கு தென்காசி நகர காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாடசாமி ஜோதிடர் தலைமை வைத்து கையெழுத்து இயக்கத்தினை தொடங்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர் ஏஜிஎம். கணேசன்,காங்கிரஸ் கட்சியின் நகர செயலாளரும் கவுன்சிலருமாகிய
ரபிக், மாவட்ட பிரதிநிதியும், கவுன்சிலருமான சுப்பிரமணியன்,நகர துணைத் தலைவர் பீர் முகம்மது, 19 வது வார்டு தலைவர் சபரி முருகேசன், 20 வது வார்டு தலைவர் நரி சேட், உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்