அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமியை சந்தித்து அழைப்பிதழ் வழங்கிய முன்னாள் எம்.பி.!
தென்காசி

சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முன்னாள் எம்பி
கே ஆர் பி பிரபாகரன் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழ் வழங்கினார்.
தென்காசி ஏப்ரல் 23
அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிச்சாமியை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் முன்னால் நெல்லை பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மாவட்ட அதிமுக செயலாளரும், தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக அம்மா பேரவை செயலாளருமாகிய
கே ஆர் பி பிரபாகரன் மே மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள தனது மகளின் பூப்புனித நீராட்டு விழா அழைப்பிதழை குடும்பத்தினருடன் நேரில் சந்தித்து வழங்கினார்.
செய்தியாளர்
AGM கணேசன்