சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் ஒற்றுமை அணி வகுப்பு பேரணி .!
தென்காசி
புளியங்குடியில் நவ 24 ல் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினத்தை முன்னிட்டு மாபெரும் ஒற்றுமை அணி வகுப்பு பேரணி
தென்காசி நவ 21
இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் உணர்வை தூண்டும் வகையில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணி - மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் தென்காசி மாவட்டம் புளியங்குடியில் நடைபெறுகிறது.

இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப் படும் சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் ஒற்றுமை அணிவகுப்பு நிகழ்ச்சியானது மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியில் வருகின்ற 24-ஆம் தேதி சர்தார் வல்லபாய் படேலின் 150-ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் ஒற்றுமை அணிவகுப்பு பேரணியானது நடைபெற உள்ளது.
இந்த பேரணியில், தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய பிரமுகர்கள் மற்றும் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க உள்ள நிலையில், இந்த பேரணியின் மூலம் இளைஞர்களிடையே ஒற்றுமை மற்றும் தேசபக்தியின் உணர்வை தூண்டும் வகையில் பேரணியானது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிரச்சாரத்தின் மிக முக்கிய அத்தியாயமான 152 கிலோமீட்டர் தூரம் நடைபெற உள்ள தேசிய பேரணியானது, நமது அரசியலமைப்பு தினமான நவம்பர் 26-ம் தேதி சர்தார் வல்லபாய் படேல் பிறந்த இடமான கரம்சாத்திலிருந்து கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை வரை தேசிய பேரணியானது நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் தென்காசி மாவட்ட இளைஞர் ஒருங்கிணைப்பாளர் பிரவீன்குமார், வாசுதேவன் தங்கப்பழம் கல்லூரி பேராசிரியர் ராஜேஷ்குமார் முப்புடாதி சண்முகவேல் ராஜமுத்து கௌதம் சதீஷ் என்ற சண்முகையா ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்
AGM கணேசன்
