வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் (ABDP) கீழ், மாவட்ட ஆட்சியருக்கு தங்க பதக்கம். !
தென்காசி

இந்திய அரசின் நிதி ஆயோக்கால் அடையாளம் காணப்பட்ட 6 முக்கிய செயல்திறன் குறிகாட்டிகளிலும் (KPIs) முழுமை அடைந்ததற்காக, மேலநீலிதநல்லூர் வட்டாரத்திற்கு, வளமிகு வட்டார வளர்ச்சி திட்டத்தின் (ABDP) கீழ், மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோருக்கு தங்கப் பதக்கம் வழங்கப் பட்டுள்ளது .
மாநில திட்டக் குழுவினால் இன்று சென்னையில் ஒருங்கிணைக்கப்
பட்ட மாநில அளவிலான விருது வழங்கும் விழாவில், தென்காசி மாவட்ட ஆட்சியர் சார்பாக, மேலநீலிதநல்லூர் வட்டார வளர்ச்சி அலுவலரால் விருது பெறப்பட்டது.
செய்தியாளர்
AGM கணேசன்