தென்காசியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் .!

தென்காசி

தென்காசியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் .!

தென்காசியில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்க பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் 

பொது மக்கள் கடும் எதிர்ப்பு

தென்காசி டிச 17


தமிழகஅரசு நகராட்சி நிர்வாக துறை மூலம் ஆணை பிறப்பிக்கப் பட்ட தென்காசி நகராட்சிக்கு புதிய பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும்  நகர பொது மக்களிடம் கருத்து கேட்பு கலந்தாய்வுக் கூட்டம் தென்காசியில் உள்ள தனியார் மண்டபத்தில் வைத்து நேற்று நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், நகராட்சி செயற் பொறியாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலையில் திட்ட ஆலோசனைக்குழு தலைவர் பாலாஜி துணைத் தலைவர் ராகவன் ஒருங்கிணைப்பாளர் பிச்சுமணி மற்றும் சுந்தரேசன் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினர்.

இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் அனைத்து கட்சி நிர்வாகிகள் வியாபாரிகள் பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதில் பாதாள சாக்கடை திட்டம் குறித்து கருத்து கூறிய பலர் புதிதாக தொடங்கப்பட்ட தென்காசி மாவட்டம் என்பதாலும் மாவட்ட மக்களுக்கு
வருமானம் தரக் கூடிய தொழில் ரீதியான வளர்ச்சியை முதலில் அரசு நிறுவ வேண்டும் எனவும், ஏற்கனவே வீட்டு வரி தண்ணீர் வரி சொத்துவரி என்று 40க்கும் மேற்பட்ட வரிகளை மக்கள் நகராட்சிக்கு செலுத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

 இந்நிலையில் மேலும் பாதாள சாக்கடை திட்டத்திற்கும் மக்கள் வரி செலுத்த நேரிடும் என்பதால் மக்களுக்கு மேலும் ஒரு வரிச் சுமை தான் ஏற்படும் எனவும் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் தென்காசி நகரத்தில் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசல் மிகுதியாக இருப்பதாலும், திட்டத்திற்காக சாலைகளில் தோண்டப்படும் குழிகளால் போக்குவரத்து இடையூறும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும், வயதான பெரியவர்களுக்கும் பாதுகாப்பாற்ற சூழ்நிலையும் போக்குவரத்தால் விபத்துகளும் நேரிடும் என்பதையும் சுட்டிக்காட்டினர். 

பல ஆண்டுகாலமாக தென்காசி நகர்ப்பகுதியில் சாக்கடை கழிவுகள் என்பது தேங்கி நிற்பது இல்லை என்றும் அப்படியே அதிக அளவில் மழை பெய்தாலும் உடனடியாக தண்ணீர் வாறுகால் ஓடை வழியாக சிற்றாறில் கலந்து விடுவதால் எந்த பாதிப்பும் இதுவரை இல்லை என்றும் ஒருபுறம் தெரிவித்தனர். எனவே இந்த பாதாள சாக்கடை திட்டம் அமுல்படுத்தினால் கடுமையாக பொது மக்கள் நடுத்தர ஏழை எளிய மக்கள் வியாபாரிகள் பாதிக்கப் படுவதாக கூறி இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டுமெனவும் மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

அதற்கு பதிலாக புதிதாக துவங்கப் பட்ட மாவட்டத்திற்கு தொழிற்சாலைகள் அமைத்தால் மக்களின் வாழ்வாதாரம் உயரும் எனவும் அதற்கு அரசு முதலில் வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்

AGM கணேசன்